UPDATED : ஏப் 22, 2016 12:00 AM
ADDED : ஏப் 22, 2016 10:49 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி
:
ஆல்பா ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா சுபலட்சுமி மகாலில் நேற்று நடந்தது.
ஆல்பா கல்வி
நிறுவனங்களின் சேர்மன் பாஷிங்கம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் தனலட்சுமி,
ஆல்பா கல்வி நிறுவனர் தனத்தியாகு, துணை இயக்குநர் ராஜலட்சுமி தனத்தியாகு, ஆர்த்தோ கிளினிக் துணை இயக்குநர் நந்தினி ஆகியோர் குத்து விளக்கு
ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
பள்ளி கல்வித்
துறை, பெண் கல்வி பிரிவு துணை இயக்குநர் சோமசுந்தரம்
முன்னிலை வகித்தார்.
போக்குவரத்து போலீஸ் எஸ்.பி.,ரச்சனா சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆல்பா ஆங்கில மேல்நிலைப் பள்ளி இயக்குநர் நவீன்தியாகு நன்றி கூறினார்.
