UPDATED : ஏப் 26, 2016 12:00 AM
ADDED : ஏப் 26, 2016 10:54 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி
:
கதிர்காமம் இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் ஆண்டு விழா நடந்தது.
கதிர்காமம் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவில், பல்வேறு இலக்கிய, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பரிசளிப்பு விழாவில் கல்லுாரி முதல்வர் குமரன் வரவேற்றார்.
உயர் கல்வி இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி,
தாகூர் கலைக்கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன்
ஆகியோர் சிறப்புரையாற்றி, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்கினர்.
கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்களின் படைப்புகள் அடங்கிய கல்லுாரி மலரை, உயர் கல்வி இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி வெளியிட்டார். ஆங்கிலத் துறை பேராசிரியர் அருளரசி நன்றி கூறினார்.
