UPDATED : ஏப் 26, 2016 12:00 AM
ADDED : ஏப் 26, 2016 11:01 AM
புதுச்சேரி
:
தேசிய கருத்தரங்கில் முதலிடம் பிடித்த கூட்டுறவு மேலாண்மை நிறுவன மாணவருக்கு
பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மூலம் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்ட வகுப்புகள், திறன் மேம்பாட்டு பயிற்சி சார்ந்த சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பாரதியார் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, முழுநேர, பகுதிநேரமாக, வார இறுதி நாட்களில் பி.சி.ஏ., பி.எஸ்சி., எம்.பி.ஏ., உள்ளிட்ட பட்ட மேற்படிப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிறுவனத்தின் எம்.சி.ஏ., 2ம் ஆண்டு மாணவர் விமல்ராஜ், மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த தேசிய அளவிலான இணையதள வடிவமைப்பில் முதல் இடத்தையும், புதுச்சேரி என்.ஐ.டி.யில் நடந்த தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கில் முதல் இடத்தையும் பிடித்தார்.
இம்மாணவரை, கூட்டுறவு மேலாண்மை நிறுவன முதல்வர் பாலகிருஷ்ணன், கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் ரங்கநாதன் ஆகியோர் பாராட்டினர்.
