UPDATED : மே 02, 2016 12:00 AM
ADDED : மே 02, 2016 11:04 AM
அ நிறம் | அளவு
கூடலுார்
:
கூடலுாரில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு, பெல்ட் வழங்கப்பட்டது.
கூடலுாரில் உள்ள செயின்ட் மேரீஸ் உயர்நிலை பள்ளி, ஜோசப் மழலையர் பள்ளி, பாத்திமா துவக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கடந்த சில மாதங்களாக, கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில்,
சிறந்த முறையில், பயிற்சி மேற்கொண்ட மாணவர்களுக்கு பெல்ட் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவுக்கு, பங்கு தந்தை ஜார்ஜ் டேவிட் தலைமை
வகித்தார். மேரீஸ் பள்ளி தாளாளர், பிரான்சிஸ் வில்லியம் முன்னிலை வகித்து,
மாணவ, மாணவியருக்கு பெல்ட் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை
காரத்தே தலைமை பயிற்சியாளர் ஜவகர் செய்திருந்தார்.
