UPDATED : மே 04, 2016 12:00 AM
ADDED : மே 04, 2016 10:35 AM
அ நிறம் | அளவு
இதனால், நாட்டிலேயே மிகப்பெரிய மருந்தியல் கல்வி மையமாக அமைய வேண்டிய மதுரை திட்டம், தாமதமாகிறது.
உலகளவில் மருந்து தயாரிப்பில், இந்தியா, 5வது இடத்தில் உள்ளது. மருந்து தயாரிப்பு தொழிலிலுள்ள ஏராளமான வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தரமான, சிறந்த கல்வித்தகுதி உடையவர்களை உருவாக்குவதற்காகவும் அமைக்கப்பட்டது, நைபர் எனப்படும், தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம். பார்லி.,யில் சட்டம் கடந்த 1991ல், பஞ்சாப் மாநிலம் மொகாலியில், ஒரு சொசைட்டியாக துவங்கப்பட்ட நைபர், 1998ல், பார்லிமென்டில் சட்டம் இயற்றப்பட்டு, கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது, மொகாலி, ஐதராபாத், ஹாஜிபுர், கோல்கட்டா, ரேபரேலி, கவுஹாத்தி ஆகிய இடங்களில், நைபர் செயல்பட்டு வருகிறது. இதில் மொகாலியில் மட்டுமே, முழுமையாக செயல்பட்டு வருகிறது. மற்ற இடங்களில், பணிகள் முழுமையாக முடியவில்லை. அந்த வரிசை யில், தமிழகத்தின் மதுரையில், புதிய மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான நிலத்தை, தமிழக அரசு அளிப்பது என்றும்; 900 கோடி ரூபாய் செலவில், மையத்திற்கான கட்டடங்கள், பரிசோதனை மையம் உள்ளிட்ட வசதிகளை, மத்திய அரசு மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கடந்த, 2009ல், இருமுறை மத்திய குழுக்கள் வந்து பார்வையிட்டு இடத்தை உறுதி செய்தன. வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு, மதுரையில் இடையப்பட்டி கிராமத்தில், 100 ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த மையம்அமைப்பதில், பெரியளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
செயல்படுமா?
நடப்பு பட்ஜெட்டில், மதுரை நைபர் மையத்திற்கு, 174 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மத்திய மருந்து, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை பரிந்துரை செய்திருந்தது. ஆனால், பட்ஜெட்டில் வெறும், ஒரு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகள் துவங்காத நிலையில், போதிய நிதி ஒதுக்கீடும் இல்லாத நிலையில், வரும், 2017 கல்வி ஆண்டு முதல், இந்த மையம் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பார்லி., குழு பரிந்துரை
நைபர் மையங்கள் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு குறித்து, மருந்து துறைக்கான பார்லி., நிலைக்குழு ஆய்வு செய்தது.மதுரை திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், அதிக நிதியை அளிக்க வேண்டும் என்று, நிதித் துறையை, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை வலியுறுத்த வேண்டும் என்று, பார்லி., குழு பரிந்துரை செய்துள்ளது.மதுரையை தவிர, வேறு சிலபகுதிகளிலும், நைபர் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைவாகவே உள்ளது.
ஆமதாபாத்துக்கு, 21.96 கோடி ரூபாய்; ஐதராபாத்துக்கு, 35 கோடி ரூபாய்; ரே பரேலிக்கு, ஏழு கோடி ரூபாய்; ஹாஜிபூருக்கு, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றசாட்டு உள்ள நிலையில், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கரிலும், நைபர் மையம் துவங்கப்படுவதாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய ரசாயன துறை உயரதிகாரிகள் கூறியதாவது:
நைபர் மையம் அமைப்பதற்கு, மற்ற மாநிலங்களைவிட மிக அதிக மாக, தமிழக அரசு, 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளது. இந்த மையம், இரு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, முதற்கட்டமாக, 500 கோடி ரூபாயும், இரண்டாம் கட்டமாக, 400 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட உள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கீடு அளிப்பது குறித்து, நிதித் துறையின் கீழுள்ள செலவின நிதிக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அங்கு நிலுவையில் உள்ளது.இருப்பினும், இந்த ஆண்டே, மதுரையில் நைபர் மையம் அமைக்க மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
தற்காலிகமாக, வாடகை கட்டடத்தில் மையத்தை இயக்கவும், வரும் ஆகஸ்ட் முதல், வகுப்புகள் துவங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு, வெகுவிரைவில் வெளியாகும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
