மாணவிகள் படித்தால் மட்டும் போதாது; சாதனைகளை புரிய வேண்டும்
மாணவிகள் படித்தால் மட்டும் போதாது; சாதனைகளை புரிய வேண்டும்
UPDATED : மே 05, 2016 12:00 AM
ADDED : மே 05, 2016 10:54 AM
விழுப்புரம்
:
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் 16வது ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி
இயக்குனர் கஸ்துாரிபாய் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர்
செந்தில்குமார், முதல்வர் அருணாகுமாரி முன்னிலை
வகித்தனர்.
கடந்தாண்டு கலை
மற்றும் அறிவியல் துறைகளில் பயின்ற மாணவிகள் 626 பேருக்கு பட்டய சான்றுகளை, திருவள்ளுவர்
பல்கலைக்கழகம் (வேலுார்) துணை வேந்தர் முருகன் வழங்கினார். பின்னர், மாணவிகளை பாராட்டி, அவர் பேசியதாவது:
படித்து பட்டம்
பெறும் பெண்கள் வாழ்வில் சாதிக்க பிறந்தவர்கள். இந்த நாள் உங்கள் வாழ்நாளில் மறக்க
முடியாத நிகழ்வு. உலகில் நிறைய ஆய்வுகள், கட்டுரைகள்
மூலம் பலர் சாதித்து வருகின்றனர்.
ஆனால், பெண்களை படிக்க வைத்து அவர்கள் உலகில் சிறக்க செய்யும் பெற்றோர்கள்
கனவை, ஆசிரியர்கள் மூலம் இந்த தெய்வானை மகளிர்
கல்லுாரி செய்து வருகிறது.
உலகில் பல
பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்துள்ளனர். மேரிகியூரி, இரு முறை அறிவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றுள்ளார். அதே
போல், இந்திராகாந்தி அரசியல் மூலம் மக்களுக்கு பல
நற்பணிகளை செய்துள்ளார்.
இவர்களை எல்லாம் மாணவிகள் வாழ்வில் முன்னுதாரணமாக எடுத்து கொண்டு சாதிக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு முருகன் பேசினார்.
