UPDATED : மே 09, 2016 12:00 AM
ADDED : மே 09, 2016 10:58 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்
:
ராமநாதபுரத்தில் 14 வயதிற்குட்பட்டோருக்கான கோடை கால இலவச
ஹாக்கி பயிற்சி முகாம் மே 12ல் துவங்குகிறது.
ஹாக்கி யூனிட் ஆப்
தமிழ்நாடு மாநில தலைவர் செல்லத்துரை அப்துல்லா கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் 14 வயதிற்கு உட்பட ஆண்கள், பெண்களுக்கு மே 12 முதல் மே 28 வரை காலை 6 மணி, மாலை 4 மணிக்கு கோடை கால இலவச ஹாக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது.
முகாமில் ஹாக்கி விளையாட்டின் அனைத்து நுட்பங்கள் சொல்லி தரப்படுகிறது. வேலுமாணிக்கம் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடக்கும் முகாமில் பங்கேற்க விரும்புவோர் 96551 81239 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
