தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி செல்லா குழந்தைகள்; ஒரு மாதத்தில் நடந்த கணக்கெடுப்பு

பள்ளி செல்லா குழந்தைகள்; ஒரு மாதத்தில் நடந்த கணக்கெடுப்பு

பள்ளி செல்லா குழந்தைகள்; ஒரு மாதத்தில் நடந்த கணக்கெடுப்பு


UPDATED : மே 11, 2016 12:00 AM

ADDED : மே 11, 2016 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2016 12:00 AM ADDED : மே 11, 2016 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்
: கடந்த
, ஒரு மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பில், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆறு முதல், 14 வயதுடைய குழந்தைகள், 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக, ஆண்டு தோறும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. 

இதுகுறித்து, கல்வி அதிகாரிகள் கூறியதாவது: 

நடப்பாண்டு மாநிலம் முழுவதும், 92 ஆயிரத்து, 381 நகர, கிராம பகுதியில், 79 ஆயிரத்து, 844 நகர, கிராமங்களில் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த, ஏப்ரல், 5ம் தேதி முதல், இம்மாதம், 5ம் தேதி வரை நடந்த கணக்கெடுப்பில், மாநிலம் முழுவதும், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதில், கிருஷ்ணகிரி, அதிகபட்சமாக, 1,949, திருநெல்வேலி, 1,386, விழுப்புரம், 1,384, கோவை, 1,381, குறைந்தபட்சமாக கன்னியாகுமாரி, 109, நாகப்பட்டினம், 131 என, பள்ளிசெல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களை, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us