UPDATED : மே 12, 2016 12:00 AM
ADDED : மே 12, 2016 11:17 AM
புதுச்சேரி
:
முறைகேடு விவகாரத்தில் சிக்கிய புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந் தர் சந்திரா
கிருஷ்ணமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தக வல் பரவியுள்ளது.
புதுச்சேரி
பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக
குற்றச்சாட்டு எழுந்தது. இதன் எதிரொலியாக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உண்மை
அறியும் குழு விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்தது.
இதனை தொடர்ந்து
துணை வேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி கட்டாய விடுப் பில் செல்ல உத்தரவிட்டதோடு,
ஏன் டிஸ்மிஸ் செய்ய கூடாது என, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து
சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் சந்திரா
கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். சுப்ரீம் கோர்ட், மூன்று மாத காலத்திற்குள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நோட்டீஸ்க்கு
பதில் அளிக்க உத்தரவிட்டது.
இதற்கான இறுதி
காலக்கெடு கடந்த ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைந்தது. இதற்கிடையில், புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி தனது
ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பார்வைக்கு தற்போது அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
மத்திய சட்ட
துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்கு பிறகு துணைவேந்தரின் ராஜினாமா குறித்து முடிவு
செய்யப்பட உள்ளது.
