UPDATED : மே 17, 2016 12:00 AM
ADDED : மே 17, 2016 12:50 PM
அ நிறம் | அளவு
பிரஞ்சு மொழியை முதன்மை பாடமாக பயின்று,மாநில அளவில் 1195 மதிப்பெண் முதல் இடத்தை பிடித்த சத்திரியா கவின், இந்திய பிரதம மந்திரியாக வேண்டும் என்று கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது, பத்தாம் வகுப்பு வரை நான், தமிழ் மொழியை தான் முதன்மை பாடமாக பயின்றேன். பிறமொழி பாடத்தை எடுத்து படிக்கலாம் என்று நினைத்து, பிரஞ்சு மொழியை சேர்வு செய்தேன். கடவுள் அருளால் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழக அளவில் முதல் இடத்தை பெற்றது மகிழ்ச்சி.
இளங்கலை பட்டப் படிப்பில், அரசியல் அறிவியல் பாடத்தை தேர்வு செய்து, இந்திய பிரதம மந்திரியாக ஆக வேண்டும், இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுவதே எனது கனவு மற்றும் லட்சியம் என்று கூறினார்.
