இடம் பிடித்தது மகிழ்ச்சி; முதல் இடம் பிடித்த மாணவி
இடம் பிடித்தது மகிழ்ச்சி; முதல் இடம் பிடித்த மாணவி
UPDATED : மே 17, 2016 12:00 AM
ADDED : மே 17, 2016 01:30 PM
அ நிறம் | அளவு
மாநில அளவில், தான் 1195 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்து மகிழ்ச்சி என்று ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது:
நான், பிளஸ் 2 பொது தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற வேண்டும், என்னும் நோக்கத்துடன் படித்தேன். அதற்கேற்ற பலனும் கிடைத்து விட்டது. எனது பெற்றோர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். என் வகுப்பு ஆசிரியர்களின் ஊக்கத்தால் தான், என்னால் இந்த மதிப்பெண் பெற்ற முடிந்தது.

மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனது கனவு. அதனால், ’நீட்’ நுழைவுத் தேர்வுக்கு, நான் தயார் ஆகி கொண்டிருக்கிறேன். இதில் தேர்ச்சி பெறுவது கடினம். எனவே, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, பிளஸ் 2வில் பெற்ற மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.