கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ரிட்டு அவிலா சாதித்தது எப்படி?
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ரிட்டு அவிலா சாதித்தது எப்படி?
UPDATED : மே 18, 2016 12:00 AM
ADDED : மே 18, 2016 11:52 AM
அன்னுார்
:
ஆடிட்டராக விரும்புவதாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில்,
மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி,
ரிட்டு அவிலா தெரிவித்தார்.
கணபதியை சேர்ந்த தம்பதி ராஜன்- ரீனா. இவர் கம்ப்ரஸ்சர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிட்டு அவிலா, கோவில்பாளையத்தில் உள்ள கே.வி., மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
பிளஸ் 2 தேர்வில், தமிழ், 190, ஆங்கிலம், 188, கம்ப்யூட்டர் சயின்ஸ், எகனாமிக்ஸ்,
காமர்ஸ், அக்கவுன்டன்ஸி ஆகிய நான்கு பாடங்களில், 200க்கு 200 மதிப்பெண் பெற்று மொத்தம்,
1178 மதிப்பெண்கள் பெற்றார். கம்ப்யூட்டர் சயின்ஸ்
பாடத்தில், சென்டம் பெற்று மாநில அளவில் இரண்டாம்
இடம் பெற்றுள்ளார்.
மாணவி ரிட்டு
அவிலா கூறுகையில்
ஆசிரியர்கள், பெற்றோரின் வழிகாட்டுதலுடன், நல்லமுறையில் படித்தேன். அதனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட நான்கு பாடங்களில் சென்டம் பெற முடிந்தது. சி.ஏ., படித்து ஆடிட்டராக விருப்புகிறேன், என்றார்.
