UPDATED : மே 21, 2016 12:00 AM
ADDED : மே 21, 2016 10:06 AM
துாத்துக்குடி
: துாத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி நிறுவனங்களின் சார்பில் லட்சுமியம்மாள்
நினைவு தேசிய ஹாக்கி போட்டி துவங்கியது. இதில் தேசிய அளவில் 16 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் கோவில்பட்டி அணி வெற்றி
பெற்றது.
கோவில்பட்டியில்
கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் சார்பில் லட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான ஹாக்கி
போட்டிகள் நேற்று முன் தினம் துவங்கியது.
தமிழக ஹாக்கி
நிர்வாகத்தினால், பி கிரேடு போட்டிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த போட்டியில்
பெங்களூரு கனரா வங்கி, பி.சி.டி.சி., சென்னை ஐ.சி.எப்., ஐ.ஓ.பி., வங்கி, ஜலந்தர் சிக்னல்ஸ், சண்டிகர் சி.ஐ.எஸ்.எப்., மகாராஷ்டிரா
போலீஸ் அணி உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. கால் இறுதி வரை
லீக் முறையிலும், கால், அரையிறுதி நாக்-அவுட் முறையிலும் நடக்கின்றன.
போட்டிகள் மே 19 முதல் 29ம் தேதி வரை காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் நடக்கிறது. முதல் போட்டியினை கே.ஆர்.கல்வி
நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் அருணாச்சலம் துவக்கி வைத்தார். நேஷனல் இன்ஜி.,
கல்லுாரி முதல்வர் சண்முகவேல், கே.ஆர்.கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் குப்புசாமி, முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி அணி
வெற்றி முதல் போட்டியாக கோவில்பட்டி லட்சுமியம்மாள் நினைவு ஹாக்கி அணியும்,
அனந்தபூர் ஹாக்கி அகடமி அணியும் மோதின. இதில்
கோவில்பட்டி அணி 5:0 கோல் கணக்கில் வென்றது. சென்னை
ஐ.சி.எப்., பெங்களூரு கனரா வங்கிஅணியும், மகராஷ்டிரா போலீஸ் அணியும், பெங்களூரு
ஹாக்கி அணியும் மோதுகின்றன.
மாலையில் சென்னை ஐ.ஓ.பி., வங்கி அணியும், மும்பை யூனியன் ஹாக்கி அணியும், ஒடிசா கிழக்கு கடற்கரை ரயில்வே அணியும், சண்டிகர் சி.ஐ.எஸ்.எப்., அணியும் மோதுகின்றன.
