தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயிற்சி வகுப்பில் போதையில் ரகளை தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

பயிற்சி வகுப்பில் போதையில் ரகளை தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

பயிற்சி வகுப்பில் போதையில் ரகளை தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


UPDATED : மே 21, 2016 12:00 AM

ADDED : மே 21, 2016 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2016 12:00 AM ADDED : மே 21, 2016 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்
: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேர்தல் பயிற்சி வகுப்பின்போது குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட
2 தலைமை ஆசிரியர்கள் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான இறுதிகட்ட பயிற்சி வகுப்பு மே 12ல் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. ஆசிரியர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் சமீரன் விசாரணை மேற்கொண்டார். இதில் ஆசிரியர்கள் 3 பேர், குடிபோதையில் இருந்தது தெரிந்தது. அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தார். மருத்துவ பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.

இப்பிரச்னையில் திருவாடானை ஒன்றியம் மள்ளனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ், தேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ், ஓரிகோட்டை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜேசுரத்தினம் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us