தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பஸ் பாஸ் விண்ணப்பிக்கும் முறை; அறிவிப்புக்கு கோரிக்கை!

பஸ் பாஸ் விண்ணப்பிக்கும் முறை; அறிவிப்புக்கு கோரிக்கை!

பஸ் பாஸ் விண்ணப்பிக்கும் முறை; அறிவிப்புக்கு கோரிக்கை!


UPDATED : மே 23, 2016 12:00 AM

ADDED : மே 23, 2016 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2016 12:00 AM ADDED : மே 23, 2016 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை
: வரும் கல்வியாண்டுக்கான பஸ் பாஸ்
, விண்ணப்பிக்கும் முறை குறித்து, விடுமுறைக்குள் தெளிவான அறிவிப்பு வெளியிட பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயணம் செய்வதற்கு, அரசின் சார்பில் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை எளிமையாக்கும் விதமாக கடந்தாண்டு, ஆன்லைனில் மாணவர்களின் விவரங்களை பதிவு திட்டமிடப்பட்டது.

இதனால், விண்ணப்பங்களும் வழங்கப்படவில்லை. பின்பு, ஆன்-லைனில் குளறுபடி ஏற்பட்டதால், விண்ணப்பங்கள் மூலமாக பாஸ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நடப்பாண்டு, பஸ் பாஸ் வழங்குவது குறித்து இதுவரை தகவல் இல்லை. பாஸ் வழங்குவதில் தாமத நிலை ஏற்பட்டதால், அதற்கு முந்தைய ஆண்டு பஸ் பாஸ் பயன்படுத்திக் கொள்ள போக்குவரத்துக்கழகம் அனுமதித்தாலும், சில பஸ்களில் பழைய அட்டைகளை பயன்படுத்த அனுமதிப்பதில்லை.

இதனால், அப்போதைய சூழலில் மாணவர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். புதிதாக சேரும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில், மாணவர்கள் பள்ளிச்சீருடை அணிந்திருந்தாலே, இலவச பயணம் செய்ய அனுமதிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது.

இத்தகவல் அறியாத பல கண்டக்டர்கள், பாஸ் இல்லாத காரணத்தால் மாணவர்களை அரசு பஸ்களில் அனுமதிப்பதில்லை. இப்பிரச்னைக்கு முழு தீர்வு, புதிய பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படுவது. நடப்பாண்டில் இதுகுறித்து தகவலே வராத நிலையால் மாணவர்களுக்கு விரைவில் பாஸ் கிடைப்பதில் சிக்கலான நிலையே உள்ளது.

பாஸ் வழங்குவதற்கான விண்ணப்பிக்கும் முறை குறித்து, கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us