தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குறைவு! அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

குறைவு! அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

குறைவு! அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை


UPDATED : மே 23, 2016 12:00 AM

ADDED : மே 23, 2016 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2016 12:00 AM ADDED : மே 23, 2016 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை
: உடுமலையில்
, மாணவர் சேர்க்கைக்கு, ஆசிரியர்கள் பின்பற்றிய புதிய முயற்சிகள் பலனில்லாமல் போனதால், கடந்தாண்டை விடவும் மாணவர் எண்ணிக்கையில் சரிவை நோக்கி செல்கின்றன கிராமப்புற அரசுப்பள்ளிகள்; பள்ளி திறந்த பின் எண்ணிக்கை உயரும் என, எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் பள்ளி நிர்வாகத்தினர்.

ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலும், அரசு பள்ளிகளுக்கு ஒரு சவாலாக இருப்பது மாணவர் சேர்க்கை. துவக்கப்பள்ளிகளில் 100, 200 என இலக்கு வைத்துக் கொண்டு, மாணவர்களை சேர்த்த காலம் மாறி, தற்போது, 50 மாணவர்களை சேர்ப்பதற்குள் திண்டாடி விடுகின்றனர் பள்ளி ஆசிரியர்கள். துவக்கப்பள்ளிகளின் நிலை இப்படி என்றால், உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் நிலை மேலும் மோசமாகவே உள்ளது.

தொலைதுார பள்ளிகள்

அருகிலேயே உயர்கல்விக்கான பள்ளிகள் இருந்தாலும், பெற்றோரும், மாணவர்களும், அவற்றை புறக்கணிக்கின்றனர். மாற்றாக, பஸ்சில் செல்லும் நிலையில் இருந்தாலும் சகித்துக்கொண்டு, தொலைதுார பள்ளிகளை தேர்வு செய்கின்றனர். காலை நேர கூட்ட நெரிசலில் சிக்கித்தவிப்பது, நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் போவது, உடல்நல சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்னைகளையும் தங்கள் குழந்தைகளுக்கு தேடித்தருகின்றனர்.

இதனால், மாணவர்களின் உடல்நலம் மட்டுமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி, படிப்பில் கோட்டை விடுவதே, பெரும்பான்மையான நிலையாக உள்ளது.

அங்கன்வாடியிலும் சரிவு

ஐந்து வயது முடிவடைந்த குழந்தைகள் மட்டுமே, அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுகிறது.

இதனால் வேலைக்கு செல்லும் பெற்றோர் பலரும், குழந்தைகளை பராமரிக்க முடியாமல், தனியார் பள்ளிகளில் &'ப்ளே கிளாஸ்&' எனப்படும் முதல் வகுப்புக்கு முந்தைய வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். இதனால், அங்கன்வாடிகளிலும் ஒற்றைப்படையில் தான் குழந்தைகளின் எண்ணிக்கை உள்ளது.மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதில், ஒரு கல்வியாண்டின் இறுதி முதலே ஆசிரியர்கள் களம் இறங்குகின்றனர்.

வீடுவீடாக, தங்கள் பள்ளியின் சிறப்பு குறித்து நோட்டீஸ் அச்சடித்து வினியோகிப்பது, பெற்றோரிடம் பேசுவது, பல்வேறு சலுகை அளிப்பது என தீவிரப்பணியில் ஈடுபட்டனர். விளைவு, 10:1 என்ற சதவீதம் மட்டுமே சேர்க்கை அதிகரிக்கிறது.

அருகிலுள்ள பள்ளிக்கு உதவி

நடப்பாண்டில், ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், அதற்கு அருகிலுள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் உள்ள குழந்தைகளை தங்கள் பள்ளிக்கு அழைத்து வர, அப்பள்ளி குழந்தைகளுக்கு போட்டிகள் வைப்பது, கண்காட்சி நடத்துவது, மாணவர்களை ஊக்குவிப்பது, தனியார் அமைப்புகள் மூலம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது போன்ற புதிய யுக்திகளை பயன்படுத்தி சேர்க்கையை அதிகரித்துள்ளனர்.

இன்றைய சூழலில், புதிய மாணவர்களின் சேர்க்கை ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஏற்கனவே இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் ஆசிரியர்களின் தீவிரப்பணியாக உள்ளது.

மேம்பட்டுள்ள அரசுப்பள்ளிகள்

கல்வியின் தரத்தையும், அடிப்படை வசதிகளையும் கவனித்து பெற்றோர் பள்ளிகளை தேர்வு செய்கின்றனர். இதில், பெரும்பான்மையான கிராமப்புற அரசு பள்ளிகள் அடிப்படை வசதி உட்பட அனைத்திலும் வளர்ச்சி கண்டுள்ள நிலையிலும், அதை விளம்பரப்படுத்திக்கொள்ள இயலாததால், பெற்றோர்கள், அப்பள்ளிகள் இன்றும் பழைய நிலையில் இருப்பதாக எண்ணி புறக்கணிக்கின்றனர்.

பல பள்ளிகளில், பல்வேறு தனியார் அமைப்புகள் மூலமாக, ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பிலும், பிளஸ் 2 பொதுத் தேர்விலும், 90 சதவீதம், நுாறு சதவீதம் என தேர்ச்சியில் சாதனை படைத்து வருகின்றன. இவ்வாறு, அரசுப்பள்ளிகள் குறித்து பெற்றோர் தங்களது யூகங்களை தகர்த்து, தற்போது அப்பள்ளியின் உண்மையான நிலையறிந்து குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும்.

மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்

அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், பள்ளியின் சிறப்புகள் குறித்து முடிந்த வரை, பெற்றோரிடம் கொண்டு சேர்த்து விட்டோம். அரசுப்பள்ளிகள் தற்போது அனைத்து நிலையிலும் வளர்ச்சிபெற்றுள்ளன. பெற்றோருக்கு பள்ளியின் மீது நம்பிக்கை வர வேண்டும். சில பள்ளிகளில், தற்போது மாணவர் சேர்க்கை குறைந்திருந்தாலும், பள்ளி திறந்த பின்பு, அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us