தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு; அவகாசம் நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு; அவகாசம் நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு; அவகாசம் நீட்டிப்பு


UPDATED : மே 23, 2016 12:00 AM

ADDED : மே 23, 2016 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2016 12:00 AM ADDED : மே 23, 2016 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: தனியார் பள்ளிகளில்
, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, வரும் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன் படி, தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கு ஆரம்ப வகுப்பில், 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இப்பிரிவின் கீழ் சேர்க்கப்படும், மாணவர்களுக்கான அனைத்து கட்டண செலவையும் அரசே ஏற்கும்.

கோவை மாவட்டத்தில், கடந்த, 2ம் தேதி முதல் விண்ணப்ப வினியோகம் துவங்கியது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய, 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்தல், தேர்வு முடிவு போன்ற காரணங்களால், விண்ணப்ப வினியோக பணி, கண்காணிப்புகள் மந்த நிலையிலேயே இருந்தது.

தற்போது, விண்ணப்ப வினியோகத்துக்கான கால அவகாசம் வரும், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கால நீட்டிப்பு அறிவிப்பின்படி, பெற்றோர்கள் வரும், 30 வரை பள்ளிகளில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். வரும், 31 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us