UPDATED : மே 31, 2016 12:00 AM
ADDED : மே 31, 2016 12:18 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் ஜி.டி.என்.சாலை திருநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நடராஜன் மகள் புவனேஸ்வரி. புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து 1,122 மதிப்பெண் பெற்று உள்ளார். (தமிழ்- 187, ஆங்கிலம்- 155, புள்ளியியல்- 199, பொருளாதாரம்- 185, வணிகவியல்- 198, கணக்குப்பதிவியல்- 198).
தந்தைக்கு போதிய வருவாய் இன்றி உயர்கல்விக்கு வழிதெரியாமல் தவிக்கிறார். இவரது தந்தையின் சொற்ப வருமானம் அவரது சிகிச்சை, குடும்ப செலவுக்கே போதுமானதாக உள்ளது. புவனேஸ்வரி கூறுகையில், “கல்வி கட்டணத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. அதற்கான வருவாய் இல்லாததால் என்ன செய்வது என்றே தெரியவில்லை,” என்றார். இவருக்கு உதவ: 97894 -48087
