தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜ் பல்கலை முடிவுகளை விரைவில் அறிவிக்க உத்தரவு

மதுரை காமராஜ் பல்கலை முடிவுகளை விரைவில் அறிவிக்க உத்தரவு

மதுரை காமராஜ் பல்கலை முடிவுகளை விரைவில் அறிவிக்க உத்தரவு


UPDATED : மே 31, 2016 12:00 AM

ADDED : மே 31, 2016 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2016 12:00 AM ADDED : மே 31, 2016 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை, தொலைநிலைக் கல்வியில், 2014 - 15ம் ஆண்டில், 1,916 மாணவர்கள் நேரடி சேர்க்கை மூலம் தேர்வு எழுதினர்.

இதில் பெரும்பாலான மாணவர்கள், போலி சான்றிதழ் சமர்ப்பித்துள்ள தாக சர்ச்சை எழுந்தது இதனால், இத்தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல்கலையின் இம்முடிவால், உண்மை சான்றிதழ்கள் சமர்ப்பித்து, தேர்வு எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வேலைவாய்ப்பு, மேற்படிப்பு தடைப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, பல்கலை அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட, செயலர் அபூர்வா விசாரித்து, விரைவில் முடிவுகள் வெளியிட உத்தரவிட்டார்.

இதுகுறித்து, பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’விரைவில் முடிவுகளை அறிவிக்க, செயலர் உத்தரவிட்டு உள்ளார். சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து, பல்கலை கமிட்டி உறுப்பினர்கள் விரைவில் விசாரிக்க உள்ளனர். உண்மை சான்றிதழ் சமர்ப்பித்த, 200 பேரின் தேர்வு முடிவுகளை, ஜூன் 5ல் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us