தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி ஆசிரியர் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி ஆசிரியர் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி ஆசிரியர் கைது


UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM

ADDED : ஜூன் 03, 2016 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM ADDED : ஜூன் 03, 2016 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரத்தில் சாலையில் விளையாடிய சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் சேவியர் கோயில் தெருவைச் சேர்ந்த 12 வயது சிறுவன். சவனக்கார தெருவைச் சேர்ந்தவர் ரத்தினகுமார், 40. இவர் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். ராமநாதபுரம் சேவியர் கோயில் தெருவைச் சேர்ந்த 12 வயது சிறுவன், ஜூன் 1 மாலை 6 மணிக்கு சாலையில் விளையாடிக்கொண்டிருந்தான். 

அப்போது இரு சக்கர வாகனத்தில் பூ தொட்டிகளுடன் வந்த ஆசிரியர் ரத்தினகுமார், சிறுவனை அழைத்து என் வீட்டில் பூ தொட்டியை இறக்கி விட்டு உன்னை மீண்டும் இங்கே கொண்டுவந்து விடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுவன் ரத்தினகுமாருடன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். 

அங்கு சிறுவனுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவன் தனது தாயாரிடம் கூறினான். புகார்படி ரத்தினக்குமாரை மகளிர் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us