UPDATED : ஜூன் 08, 2016 12:00 AM
ADDED : ஜூன் 08, 2016 10:22 AM
அ நிறம் | அளவு
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் பவுலிங் கிரீன் என்ற பகுதியில் மேற்கு கென்டக்கி பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு இந்திய மாணவர்கள் 60 பேர் கடந்த ஜனவரி மாதம் கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தனர்.
முதல் பருவ தேர்வுகள் முடிந்தன
இதில் 60 பேரில் 25 மாணவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு தரத்தை எட்டிப்பிடிக்கவில்லை இதையடுத்து அந்த 25 மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு பல்கலை. நிர்வாகம் உத்தரவிட்டது. மீதமுள்ள 35 மாணவர்கள் பல்கலை.யில் படிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வெளியேற உள்ள மாணவர்கள் நாடு திரும்புவதா அல்லது அங்கு வேறு ஏதாவது ஒரு பல்கலை.யில் இடம் வாங்கி படிப்பதா என்ற பரிதாப நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
