UPDATED : ஜூன் 14, 2016 12:00 AM
ADDED : ஜூன் 14, 2016 10:35 AM
அ நிறம் | அளவு
மதுரை
:
கும்பகோணம் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், கீழமை
நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின், நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில், அரசு மற்றும் மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஜூன், 24க்குள், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். இம்மாதம், 30ல் இறுதி விசாரணை நடைபெறும் என கூறினர்.
