தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ நுழைவுத்தேர்வு வேண்டாம்!

மருத்துவ நுழைவுத்தேர்வு வேண்டாம்!

மருத்துவ நுழைவுத்தேர்வு வேண்டாம்!


UPDATED : ஜூன் 14, 2016 12:00 AM

ADDED : ஜூன் 14, 2016 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2016 12:00 AM ADDED : ஜூன் 14, 2016 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: தி.மு.க.
, பொருளாளர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கை: 

மாணவர்களின் எதிர்காலத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் உள்ள, மருத்துவ நுழைவுத் தேர்வை, நிரந்தரமாக ரத்து செய்ய, தமிழக சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது அவசர, அவசியமாகும்.

மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததன் மூலம், இந்த ஆண்டிற்கான மருத்துவ நுழைவுத் தேர்வு, தற்காலிகமாக அரைகுறையாக தடுக்கப்பட்டு இருக்கிறது. இது, மாணவர்களுக்கான முழுமையான பலனை எதிர்காலத்தில் நிச்சயம் தராது. 

குறிப்பாக, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட-, மிகவும் பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட - -பழங்குடி-, சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழிக் கல்வியில் பயில்வோர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும், இந்த நுழைவுத் தேர்வு மிகுந்த நெருக்கடியையும், பின்னடைவையும் உண்டாக்கி, அவர்களின் கல்விக் கனவையும் எதிர்காலத்தையும் சிதைக்கக் கூடியதாகும். 

தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் கொண்டு வர வேண்டும். நுழைவுத் தேர்வே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். இதற்கு முதல்வர் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us