தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!

தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!

தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!


UPDATED : ஜூன் 17, 2016 12:00 AM

ADDED : ஜூன் 17, 2016 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2016 12:00 AM ADDED : ஜூன் 17, 2016 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், நிர்வாக விதிமீறலை கண்டித்து மாணவர்களும், ஆசிரியர்களும் நடத்திய போராட்டம், வன்முறையாக மாறியது. மாணவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

புரசைவாக்கத்தில், 83 கிரவுண்ட் இடத்தில் சர்.எம்.சி.டி.எம்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. அரசு உதவிபெறும் இப்பள்ளி யில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

தருண்காய் என்பவர், நிர்வாக செயலராக பொறுப்பேற்றதிலிருந்து, பள்ளி மூடும் நிலைக்கு தள்ளப்படுவதாக, இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட இடத்தில் பள்ளி செயல்பட்டும், நிர்வாகத்திற்கு எந்த லாபமும் இல்லை. எனவே, பள்ளியில் மாணவர் சேர்க்கையை பல மடங்கு குறைத்து விட்டு, பள்ளியை மூடி விட்டு, அந்த இடத்தில் தனியார் நிறுவனத்தை கொண்டு வர பள்ளி நிர்வாகத்தில் சிலர் முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விதிமீறல்கள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், 38 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சில வாரங்களுக்கு முன், பள்ளியின் மூத்த ஆசிரியர் பொறுப்பில் இருந்த தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் மாற்றப்பட்டு, அனுபவத்தில் அவருக்கு, 10 பேருக்கு பின்தங்கியிருந்த ரவிசங்கர் என்பவரை, தலைமை ஆசிரியராக அவசரமாக நியமித்துள்ளதாகவும் சர்ச்சை கிளம்பியது.

புதிய தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராடும் ஆசிரியர்களில், ஐந்து பேருக்கு மட்டும், மெமோ கொடுத்து, சஸ்பெண்ட் செய்வதாக எச்சரித்துள்ளார். இந்த பிரச்னை, நேற்று பூதாகரமானது. ஆசிரியர்களுடன், மாணவர்களும் சேர்ந்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி, கேன்டீன் ஊழியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், மாணவர்களால் உருட்டுக்கட்டை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த பிரச்னையில் பள்ளி வளாகத்தில் இருந்த கட்டட ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதையடுத்து, பள்ளிக்குள் நுழைந்த போலீசார், மாணவர்களை விரட்டி வெளியேற்றினர். இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி, சென்னை முதன்மை கல்வி அதிகாரி அனிதா மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பள்ளி நிர்வாக விதிமீறல்கள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us