தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மயில்சாமி அண்ணாதுரை, ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம்

மயில்சாமி அண்ணாதுரை, ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம்

மயில்சாமி அண்ணாதுரை, ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம்


UPDATED : ஜூலை 26, 2009 12:00 AM

ADDED : ஜூலை 26, 2009 03:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2009 12:00 AM ADDED : ஜூலை 26, 2009 03:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
துணை முதல்வர் ஸ்டாலின், ‘சந்திரயான்’ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், ஆகஸ்ட் 1ம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துணை முதல்வர் ஸ்டாலின், ‘சந்திரயான்’ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
துணை முதல்வர் ஸ்டாலின் பல இடங்களில் பாலங்கள் கட்டுவதிலும், பூங்காக்கள் அமைப்பதிலும் ஆர்வம் செலுத்தியுள்ளார். சுயஉதவிக் குழுக்களுக்கும் ஊக்கம் அளித்து வருகிறார். அவரது இந்தப் பணிக்காக ஆர்க்கிடெக்சர் மற்றும் சமூக அறிவியல் துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரைக்கு விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆற்றிய சாதனைக்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீடியா சயின்ஸ் துறையில் ஆற்றிய சாதனைக்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இதற்கான விழா, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் ஆகஸ்ட் 1ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, மூவருக்கும் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்குவார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை பொறியியல் துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு, தற்போது முதல்முறையாக சமுதாயப் பணியாற்றியவர்களுக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us