கேம்பஸ் இன்டர்வியூக்களில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
கேம்பஸ் இன்டர்வியூக்களில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
UPDATED : ஜூலை 26, 2009 12:00 AM
ADDED : ஜூலை 26, 2009 04:51 PM
தற்போது காணப்படும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக கல்லூரிகளில் நடத்தப்படும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் ஐ.டி., நிறுவனங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இதனால் கல்லூரிகளில் உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தான் அதிக அளவில் கேம்பஸ் வேலை வாய்ப்புகளுக்காக வரவிருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கேம்பஸ் இன்டர்வியூக்களில் முதல் நாள் தேர்வாகிடும் மாணவர்கள் பொதுவாக மிக உயர்ந்த தரம் வாய்ந்தவர்களாக இருப்பது வாடிக்கை. இவர்களை அதிக எண்ணிக்கையில் கொத்திப் போவது இந்த அடிப்படைப் பொருளாதார நிறுவனங்கள் தான்.
இந்த ஆண்டு தான் இந்த நிறுவனங்களுக்கு முதல் நாள் நபர்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஐ.டி., நிறுவனங்கள் இந்த கேம்பஸ் இன்டர்வியூக்களில் கலந்து கொள்வது குறைந்திருந்தாலும் எச்.சி.சி., டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ், அசோக் லேலண்ட், இந்தியன் ஆயில் கழகம், மகேந்திரா அண்ட் மகேந்திரா, டி.என்.பி.எல்., போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு கேம்பஸில் கலந்து கொள்வது மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது.
