தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை விரிவுரையாளர் உருவாக்கிய மொழிபெயர்ப்பு மென்பொருள்

பல்கலை விரிவுரையாளர் உருவாக்கிய மொழிபெயர்ப்பு மென்பொருள்

பல்கலை விரிவுரையாளர் உருவாக்கிய மொழிபெயர்ப்பு மென்பொருள்


UPDATED : ஆக 01, 2009 12:00 AM

ADDED : ஆக 01, 2009 11:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2009 12:00 AM ADDED : ஆக 01, 2009 11:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக கணினி துறை விரிவுரையாளர் தயாரித்த ‘டிரான்ஸ்லிட்ரேஷன்’ மென்பொருளை, சிங்கப்பூரில் உள்ள கணினி மொழியியல் சங்கம் அங்கீகரித்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக கணினி துறை மேல்நிலை விரிவுரையாளர் விஜயானந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி பல்கலைக்கழக கணினி துறையில் மேல்நிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறேன். நானும் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த மாணவி பூங்குழலி ஆகியோர் இணைந்து, மொழிபெயர்ப்பு மென்பொருளுக்கு அவசியமாகத் தேவைப்படும் பெயர்ச்சொற்களை மொழி பெயர்க்கும் மென்பொருளைத் தயாரித்துள்ளோம். அதை சிங்கப்பூரில் உள்ள கணினி மொழியியல் சங்கத்திற்கு அனுப்பினோம்.
அந்த சங்கம் எங்களது மென்பொருளை அங்கீகரித்து நாளை (2ம் தேதி) சிங்கப்பூரில் நடக்க உள்ள கருத்தரங்கிற்கு அழைத்துள்ளது. ஆங்கிலத்தில் உள்ள சொற்களை தமிழில் அதற்குரிய பொருள் தரும் சொற்களைக் கொண்டு மொழிபெயர்ப்பது உண்டு. ஆனால் ஒருவருடைய பெயர், ஊர் மற்றும் இடங்களின் பெயர்களை மொழி பெயர்க்க முடியாது.
ஆங்கில மொழியில் ‘ஆகாஷ்’ என்பதை தமிழில் ‘ஆகாஷ்’ என்று அப்படியே எடுத்து தமிழில் எழுவதுற்கு ‘டிரான்ஸ்லிட்ரேஷன்’ என்று பெயர். இந்த டிரான்ஸ்லிட்ரேஷன் மென்பொருளை நாங்கள் தயாரித்துள்ளோம். இதில் ஆகாஷ் என ஆங்கிலத்தில் டைப் செய்தால் அதில், ஆகாஷ், அகஷ், ஆகஷ் உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் விடையாகத் தெரியும். அதில் சரியான விடைகளைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
மொழிபெயர்ப்பைக் கணினிமயமாக்கல் குறித்து, சர்வதேச கருத்தரங்கில் நான் கலந்து கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us