தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ‘மொபைல்’ போன் பயன்படுத்த தடை

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ‘மொபைல்’ போன் பயன்படுத்த தடை

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ‘மொபைல்’ போன் பயன்படுத்த தடை


UPDATED : ஆக 04, 2009 12:00 AM

ADDED : ஆக 04, 2009 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2009 12:00 AM ADDED : ஆக 04, 2009 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொபைல் போனை விட்டு பிரிய முடியாத சூழ்நிலை மக்களிடையே நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் மத்தியிலும் மொபைல் போன் பிரபலமாக உள்ளது. பள்ளி வளாகத்திலும், வகுப்பறையிலும் மொபைல் போனில் அதிக கவனம் செலுத்துவதால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது. கேமரா வசதியுடன் கூடிய மொபைல் போன் அதிக பிரச்னைகளை ஏற்படுத்துவதால், பள்ளிகளில் கல்விக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.
எனவே, பள்ளி வளாகத்தில் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வருகிறது. பள்ளி முதல்வர், ஆசிரியர் முதல் கொண்டு மாணவர்கள் வரை பள்ளி வளாகத்தில் மொபைல் போனில் பேச தடை விதிக்கப்படுவதாக சி.பி.எஸ்.இ., நிர்வாகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கடந்த வார இறுதியில் மொபைல் போன் பேச தடை விதிக்கும் சுற்றறிக்கை கிடைத்துள்ளது.
மொபைல் போன் தடையை சில ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் வெளிப்படையாக வரவேற்றுள்ளனர். பள்ளி வளாகத்தில் மொபைல் போனில் பேசினால் என்ன தண்டனை என்பது இதுவரை குறிப்பிடப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us