தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆரம்ப கல்வி உரிமையில் இடஒதுக்கீடு கோரி போராட்டம்

ஆரம்ப கல்வி உரிமையில் இடஒதுக்கீடு கோரி போராட்டம்

ஆரம்ப கல்வி உரிமையில் இடஒதுக்கீடு கோரி போராட்டம்


UPDATED : ஆக 04, 2009 12:00 AM

ADDED : ஆக 04, 2009 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2009 12:00 AM ADDED : ஆக 04, 2009 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
ஆரம்ப கல்வி உரிமையில் இடஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊனமுற்றோர் உரிமை கூட்டமைப்பு சார்பாக, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், ஆக. 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊனமுற்றோர் உரிமை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம், உறுப்பினர் ராஜிவ் ராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டம் குறித்து உறுப்பினர் மீனாட்சி கூறுகையில், ‘மத்திய அரசு தாக்கல் செய்த கல்வி மசோதாவில், ஆரம்ப கல்விபெறும் குழந்தைகளில் ஊனமுற்றோர் சேர்க்கப்படவில்லை. பள்ளிகளில் ஊனமுற்றோர் படிப்பதற்கான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், ஊனமுற்றோர் பட்டியலில் சில ஊனங்கள் இடம்பெறவில்லை. இது குறித்து மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் எடுத்துரைத்தோம். ஆனால், அவர் போதுமான நிதியில்லை என காரணம் கூறுகிறார். எனவே, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us