தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏழை மாணவன் இன்ஜினியரிங் படிக்க போலீசார் உதவி

ஏழை மாணவன் இன்ஜினியரிங் படிக்க போலீசார் உதவி

ஏழை மாணவன் இன்ஜினியரிங் படிக்க போலீசார் உதவி


UPDATED : ஆக 05, 2009 12:00 AM

ADDED : ஆக 05, 2009 06:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2009 12:00 AM ADDED : ஆக 05, 2009 06:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் கிடைத்தும் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் போராடிய ஏழை மாணவனுக்கு சென்னை போலீசாரின் உதவி செய்துள்ளனர்.
கூலித்தொழிலாளியான  பத்மநாபன் போதைக்கு அடிமையானதால் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது மகன் கார்த்திக். ஆர்வமுடன் படித்த இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1141 மதிப்பெண் பெற்றார். இவருக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோமெடிசின் பாடப்பிரிவில் சீட் கிடைத்தது. எனினும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்தார்.
இதுகுறித்து பத்திரிக்கை வாயிலாக அறிந்த சென்னை நகர போலீஸ் கமிசனர் ராஜேந்திரன் மற்றும் இணை கமிஷனர் ரவிக்குமார் எடுத்த முயற்சியால் மாணவனின் 4 ஆண்டுகால இன்ஜினியரிங் படிப்பிற்கு ஆகும் மொத்த தொகையையும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சென்னை போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் ஆக. 4ம் தேதி மாணவன் கார்த்திக்கு முதலாமாண்டு படிப்புக் கட்டணம் ரூ.42 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us