UPDATED : ஆக 13, 2009 12:00 AM
ADDED : ஆக 13, 2009 05:48 PM
அ நிறம் | அளவு
மும்பை: இந்தியாவில், உயரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.,யில் ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில், பாதி அளவுக்கு காலியாக உள்ளன.
ஐ.ஐ.டி.,களில் பொதுப்பிரிவில் சேரும் மாணவர்களுக்காக நுழைவுத்தேர்வு மதிப்பெண் விகிதத்திலும், இந்தாண்டு சற்று குறைந்துள்ளது. பாடம் வாரியாகவும் லேசான சரிவு காணப்படுகிறது. தகுதி மதிப்பெண் கடந்தாண்டு 180 ஆக இருந்தது; இந்தாண்டு 178 ஆக குறைந்து விட்டது.
தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்படும் இடங்களில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. 2007ம் ஆண்டு 126 இடங்களும், 2008ம் ஆண்டு 104 இடங்களும், இந்த ஆண்டு வெறும் 89 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
