தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைதூர கல்வி பட்டம் அரசுப் பணி பெற செல்லாது

தொலைதூர கல்வி பட்டம் அரசுப் பணி பெற செல்லாது

தொலைதூர கல்வி பட்டம் அரசுப் பணி பெற செல்லாது


UPDATED : ஆக 14, 2009 12:00 AM

ADDED : ஆக 14, 2009 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2009 12:00 AM ADDED : ஆக 14, 2009 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உயர்கல்வித் துறை முதன்மை செயலர் கணேசன் பிறப்பித்துள்ள அரசாணை:
உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையில், 2006ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி நடந்த துணைவேந்தர்கள் கூட்டத்தில், தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பிஎச்.டி., படிப்பு வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டது.
எம்.பில்., மற்றும் பிஎச்.டி., முடித்தவர்களுக்கு, ஸ்லெட் அல்லது நெட் தேர்வு எழுதுவதிலிருந்து யு.ஜி.சி., விலக்களித்திருப்பதையடுத்து, இப்படிப்புகளில் தரத்தை மேம்படுத்துவது அவசியமாகிறது. இதையடுத்து, 2007-08ம் கல்வியாண்டு முதல் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடாது என, உயர்கல்வித் துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டது.
தபால் மற்றும் தொலைதூரக் கல்வித் திட்டம், திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலமாக பெறப்பட்ட எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டங்கள், அரசு நியமனங்களுக்கும், தனியார் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் நியமனங்களுக்கும் தகுதியற்றவை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு ஆணையிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us