தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் படிப்புகளில் மாணவிகள் சேர்க்கை குறைவு

பொறியியல் படிப்புகளில் மாணவிகள் சேர்க்கை குறைவு

பொறியியல் படிப்புகளில் மாணவிகள் சேர்க்கை குறைவு


UPDATED : ஆக 14, 2009 12:00 AM

ADDED : ஆக 14, 2009 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2009 12:00 AM ADDED : ஆக 14, 2009 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்கள் அதிகளவில் விரும்பிய, கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய, ‘சர்க்யூட்’ பிரிவுகளில் இந்த ஆண்டு சேர்க்கை குறைந்ததே, இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த கவுன்சிலிங்கிற்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 995 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில், 79 ஆயிரத்து ஐந்து பேர் மாணவர்கள்; 49 ஆயிரத்து 990 பேர் மாணவிகள். கவுன்சிலிங்கின் முடிவில், 83 ஆயிரத்து 552 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 52 ஆயிரத்து 165 பேர் மாணவர்கள் (62.43%), 31 ஆயிரத்து 387 பேர் மாணவிகள் (37.57%). கடந்த ஆண்டு மாணவர்கள் 58.96 சதவீதம்; மாணவிகள் 41.04 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவிகள் சேர்க்கை 3.47 சதவீதம் குறைந்துள்ளது.
பொறியியல் கவுன்சிலிங்கில் மாணவிகளின் சேர்க்கை, 2005ம் ஆண்டில் 37.29 சதவீதம், 2006ம் ஆண்டில் 39.13 சதவீதம், 2007ம் ஆண்டில் 41.15 சதவீதம், 2008ம் ஆண்டில் 41.04 சதவீதம், 2009ம் ஆண்டில் 37.57 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளை விட மாணவிகள் சேர்க்கை சதவீதம் இந்த ஆண்டு குறைந்துள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய, ‘சர்க்யூட்’ பிரிவுகளில் மாணவிகள் அதிகளவில் சேர்ந்து வந்தனர். கடந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் 79.38 சதவீத இடங்களும், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 71.28 சதவீத இடங்களும் நிரம்பின. ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ச்சி காரணமாக, இந்த ஆண்டு இந்த இரு பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது.
இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் 47.28 சதவீத இடங்களும், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 34.74 சதவீத இடங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் ஏற்பட்ட தொய்வினால், மொத்த மாணவர் சேர்க்கையில் மாணவிகள் சதவீதம் குறைந்துள்ளது.
அதே நேரத்தில், மாணவர்கள் அதிகளவில் சேரும் மெக்கானிக்கல் படிப்பில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us