தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜூனியர் மாணவர்களுடன் 6 மாதம் பேச தடை

ஜூனியர் மாணவர்களுடன் 6 மாதம் பேச தடை

ஜூனியர் மாணவர்களுடன் 6 மாதம் பேச தடை


UPDATED : ஆக 14, 2009 12:00 AM

ADDED : ஆக 14, 2009 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2009 12:00 AM ADDED : ஆக 14, 2009 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ராகிங்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மற்றொரு கட்டமாக, சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் ஆறு மாதங்கள் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ராகிங்கை கட்டுப்படுத்த பேராசிரியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன், ராகிங் தொடர்பாக, புகார் தெரிவிக்க ‘பிளாக் பாக்ஸ்’ என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
ராகிங் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் உச்சகட்டமாக, முதலாம் ஆண்டு மாணவர்களுடன், சீனியர் மாணவர்கள் பேச ஆறு மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிவப்பு நிற பட்டையுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனியர் மாணவர்கள் அனைவருக்கும் பச்சை நிற பட்டையுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் பேசும் சீனியர் மாணவர்கள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ராகிங்கில் ஈடுபட்டது தெரியவந்தால், உடனடியாக கல்லூரியை விட்டு நீக்கப்படுவர் என்றும் துணைவேந்தர் மன்னர் ஜவகர் எச்சரித்துள்ளார்.
இதனால், முதலாம் ஆண்டு மாணவர்களிடம் செல்லவே, சீனியர் மாணவர்கள் பயப்படுகின்றனர். முதலாம் ஆண்டு மாணவர்களுடன் நட்பு ரீதியாகக் கூட பழகாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து, முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் கூறுகையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எவ்வித ராகிங்கும் இல்லை. முதலாம் ஆண்டு மாணவர்களுடன், சீனியர் மாணவர்கள் யாரும் பேசுவதில்லை. எங்களுக்கு தெரிந்த சீனியர் மாணவர்களிடம் நாங்களாகத் தான் சென்று பேசுகிறோம். வெளியூர்களிலிருந்து வந்திருக்கும் பல மாணவர்கள், பல்கலையில் எந்தெந்த இடங்கள் எங்கு உள்ளன; எப்படி செல்ல வேண்டும் என்ற சின்ன சின்ன விஷயங்களைக் கூட சீனியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடிவதில்லை,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us