பன்னாட்டு வர்த்தக கல்வி நிறுவனத்தின் எம்.பி.ஏ., படிப்பு அறிவிப்பு
பன்னாட்டு வர்த்தக கல்வி நிறுவனத்தின் எம்.பி.ஏ., படிப்பு அறிவிப்பு
UPDATED : ஆக 14, 2009 12:00 AM
ADDED : ஆக 14, 2009 05:04 PM
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட் எனப்படும் ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனம் சர்வதேச புகழ் பெற்ற நிறுவனம்.
இது நடத்தும் பன்னாட்டு வாணிப சிறப்புப் படிப்பான எம்.பி.ஏ., படிப்பிற்குக் கடும் போட்டி நிலவுகிறது. வரும் 2010-12ம் ஆண்டில் நடத்தப்படவுள்ள எம்.பி.ஏ., படிப்புக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 7, 2009க்குள் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளவர்களும் இதை எழுதலாம். வயது வரம்பு எதுவுமில்லை.
ஆன்லைனில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கிரெடிட் கார்டுகளைக் கொண்டு கட்டணத்தை செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு இல்லாதவர்கள் டி.டி.,யாக இதை செலுத்தலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட் என்ற பெயரில் டில்லியில் மாற்றத்தக்க டி.டி.,யாக இதை எடுக்க வேண்டும். டி.டி.,யை எடுத்து வைத்துக் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.1500. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 750. வெளிநாட்டவருக்குக் கட்டணம் ரூ.3 ஆயிரம். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு கிடைக்கும் பதிவுத் தாளின் பிரிண்ட் அவுட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு முழுமையாக நிரப்பிய பின் தபால் மூலமாக ஐ.ஐ.எப்.டி.,க்கு அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் செப்டம்பர் 3.
நுழைவுத் தேர்வு நாள் நவம்பர் 22, 2009.
முழு விபரங்களுக்கு: www.iift.ac.in
