தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டோ ஜர்னலிசம் சான்றிதழ் படிப்பு

போட்டோ ஜர்னலிசம் சான்றிதழ் படிப்பு

போட்டோ ஜர்னலிசம் சான்றிதழ் படிப்பு


UPDATED : ஆக 14, 2009 12:00 AM

ADDED : ஆக 14, 2009 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2009 12:00 AM ADDED : ஆக 14, 2009 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் ஜர்னசலிசம் எனப்படும் இதழியல் படிப்புகளைத் தருவதில் முன்னணியில் இருப்பது ஐ.ஐ.எம்.எஸ்., கல்வி நிறுவனம்.
இது தற்போது ஒரு மாதத்தில் முடிக்கக் கூடிய முழு நேரச் சான்றிதழ் படிப்பாக போட்டோ ஜர்னலிசம் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இப்படிப்பை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணைச் செயலர் துவங்கி வைத்தார். வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 12 மாணவர்கள் இதில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாரம்பரிய மற்றும் போட்டோ ஜர்னலிசம் தொடர்புடைய வழிமுறைகளைப் படிப்பவர்களுக்கு முழுமையாக பயிற்றுவிப்பதே இப்படிப்பின் நோக்கமாக உள்ளது. இன்றைய எலக்ட்ரானிக் மற்றும் பிரின்ட் மீடியாவில் ஏற்பட்டு வரும் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக தொழில்நுட்ப ரீதியாக வல்லமை பெற்ற புகைப்படக் கலைஞர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இதனால் தான் போட்டோ ஜர்னசலிம் துறைக்கும் அதிக முக்கியத்துவம் தற்போது தரப்பட்டு வருகிறது.
நம்பத் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய தகவல்களைப் பெறுவது, மக்களிடம் அவற்றைக் கொண்டு செல்வது போன்ற பணிகளை போட்டோ ஜர்னலிஸ்டுகள் செய்கின்றனர். மீடியாக்களில் புகைப்பட வாயிலான தகவல் பரிமாற்றங்களுக்கு ஏற்பட்டு வரும் முக்கியத்துவத்தை உணர்ந்தே இதைத் தனியான துறையாக மாற்றி அதில் முறையான பயிற்சியைத் தரும் நோக்கத்துடன் ஐ.ஐ.எம்.சி., இப் படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
அறிக்கை ரீதியிலான புகைப்படம் மற்றும் டாகுமெண்டரி மூலமாக இதழியல் பணி செய்வது, முக்கியத் தகவல்களை வெளியிடுவது ஆகியவற்றில் இப் படிப்பு திறன் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us