UPDATED : செப் 04, 2018 12:00 AM
ADDED : செப் 04, 2018 10:29 AM
சென்னை:
ஆசிரியர் தினத்தையொட்டி, நாளை ஒரே விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்
பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. முன்னாள் ஜனாதிபதி, டாக்டர்
ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுவதும், ஆசிரியர் தினமாக
கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசு
சார்பில், ஆசிரியர் தின விழா, சென்னை கலைவாணர் அரங்கில், நாளை கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசு சார்பில், 363 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதில்
இருவர், மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள். அதேபோல, பள்ளி வளாகத்தை துாய்மையாக
பராமரித்த, 40 பள்ளிகளுக்கு, &'துாய்மை பள்ளி&' விருது வழங்கப்பட உள்ளது.
தமிழ் வழியில்
படித்து, முன்னிலை மதிப்பெண் பெற்ற, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த
மாணவர்கள், 960 பேருக்கு, காமராஜர் விருது வழங்கப்படுகிறது.
