தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மீன் விற்ற கேரள மாணவி கார் விபத்தில் படுகாயம்

மீன் விற்ற கேரள மாணவி கார் விபத்தில் படுகாயம்

மீன் விற்ற கேரள மாணவி கார் விபத்தில் படுகாயம்


UPDATED : செப் 04, 2018 12:00 AM

ADDED : செப் 04, 2018 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2018 12:00 AM ADDED : செப் 04, 2018 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோழிக்கோடு: கேரளாவில், மீன் விற்று, கல்லுாரியில் படித்து வந்த, ஹனான் ஹமீது என்ற மாணவி, சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்.

 

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, திருச்சூரை சேர்ந்தவர் ஹனான் ஹமீது, 21. இவர், இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லுாரியில், வேதியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனான், குடும்பத்தை காப்பாற்றவும், படிப்பு செலவுகளை சமாளிக்கவும், தினமும், கல்லுாரி முடிந்த பின், மார்க்கெட்டில், மீன் விற்பனை செய்து வந்தார்.

 

இவர், மீன் விற்கும், &'வீடியோ&' ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பத்திரிகைகளிலும் செய்தியாக வெளியானது. இதையடுத்து, ஹனான் ஹமீது பிரபலமானார்.இவருக்கு பாராட்டுகள் குவிந்தாலும், தன்னை பிரபலப்படுத்துவதற்காக, திட்டமிட்டு இதை செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.சமூக வலைதளம் வாயிலாக பிரபலமான ஹனான் ஹமீது, பல பொது நிகழ்ச்சி களில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில், கடை திறப்பு நிகழ்ச்சியில், நேற்று காலை பங்கேற்றார்.நிகழ்ச்சி முடிந்ததும், காரில், திருச்சூர் நோக்கி வந்தார்.

 

காலை, 11:00 மணிக்கு, கொச்சி அருகே உள்ள கொடுங்கல்லுார் என்ற இடத்தில் வந்தபோது, ஒருவர், சாலையை வேகமாக கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக, டிரைவர் முயற்சித்தார். இதில் கார், சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி, விபத்துக்குள்ளானது.இதில், ஹனான் ஹமீது படுகாயம் அடைந்தார். உடனடியாக, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us