UPDATED : செப் 04, 2018 12:00 AM
ADDED : செப் 04, 2018 10:34 AM
அ நிறம் | அளவு
மதுரை:பத்தாம்
வகுப்பில் அறிவியல் கண்காட்சி, பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாநில
அளவில் பரிசு வென்ற மதுரை நாகனாகுளம் அரசு உயர்நிலை பள்ளி மாணவி மகாலட்சுமி,
சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளர் உயர்நிலை பள்ளி மாணவர் ராகுல் ஆகியோர் கல்வித்துறை
சார்பில் &'புரட்சியாளர் விருது&'க்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதுபோல் சிறந்த
கவுன்சிலிங் மற்றும் இடைநிற்றல் இன்றி மாணவர்களை தொடர்ந்து பள்ளியில் நீட்டிக்க
செய்த கீழநாச்சிகுளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ஆசிரியை உமாராணி,
&'அன்னை தெரசா விருது&'க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களை தலைமை ஆசிரியர்கள்
அதிராமசுப்பு, நவநீதகிருஷண்ன், முருகபாண்டியன் பாராட்டினர்.
