UPDATED : செப் 04, 2018 12:00 AM
ADDED : செப் 04, 2018 10:34 AM
அன்னுார்: தமிழ்நாடு
அரசு பொது பணியாளர் தேர்வாணையம், குரூப் 2 தேர்வு வரும் நவம்பரில் நடக்க உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த அன்னுார் தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு, அகில பாரதிய
வித்யார்த்தி பரிஷத் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
தாலுகா
பொறுப்பாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். பரிஷத் கோவை கோட்ட பொறுப்பாளர்
நாகிரெட்டி பேசுகையில், &'&'பண்புள்ள மாணவர்கள், அரசு பணியில் சேருவதால், அரசு
நிர்வாகமும் பண்புள்ள மனிதர்களால் உருவாகும். முழு ஈடுபாட்டோடு கற்றால், குரூப் 2
தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்,&'&' என்றார்.
முதுகலை
தமிழாசிரியர் நரசிம்ம சுப்ரமணியன் பேசுகையில், &'&'பிளஸ் 1, பிளஸ் 2
பாடப்புத்தகங்கள், குரூப் 2 தேர்வுக்கு உதவியாக இருக்கும். தினமும் குறைந்தது ஆறு
மணி நேரம் படிக்க வேண்டும். மாதிரி வினாத்தாட்களை எழுதிப்பார்க்க வேண்டும்,&'&'
என்றார்.
நீலகிரி மாவட்ட
பொறுப்பாளர் கோபிநாத், மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சிவக்குமார் உட்பட பலர்
பங்கேற்றனர்.
அன்னுார் -
மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பரிஷத் அலுவலகத்தில், நவ., முதல் வாரம் வரை,
ஒவ்வொரு ஞாயிறும், காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை வகுப்பு நடக்கும்.
தொடர்புக்கு: 98420 44701.
