புதுச்சேரியில் 20 ஆசிரியர்களுக்கு .விருது!.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் 20 ஆசிரியர்களுக்கு .விருது!.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
UPDATED : செப் 04, 2018 12:00 AM
ADDED : செப் 04, 2018 10:35 AM
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில நல்லாசிரியர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மாநிலம்
முழுவதும் 20 ஆசிரியர்கள் விருது பெறுகின்றனர்.
ஆசிரியர் தின
விழாவை முன்னிட்டு, 2018ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதுகளை, முதல்வர்
நாராயணசாமி நேற்று அறிவித்தார். விருது பெறுவோர் விபரம் வருமாறு:
டாக்டர்
ராதாகிருஷ்ணன் விருது
தொடக்கக் கல்வி
பிரிவு
அனுராதா, தலைமை
ஆசிரியை, அரசு தொடக்கப் பள்ளி சோரப்பட்டு, புதுச்சேரி.
மல்லிகா, தலைமை
ஆசிரியை, அரசு தொடக்கப் பள்ளி, அகலங்கண்ணு, காரைக்கால்.
இடைநிலைக்
கல்வி பிரிவு
முனுசாமி,
தலைமை ஆசிரியர் நிலை-1, ஆர்.எம்.ஏ.எஸ்.பி., அரசு உயர்நிலைப் பள்ளி,
காரைக்கால்.சந்திரசேகரன், துணை முதல்வர், ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்
பள்ளி,காராமணிக்குப்பம்,
முதல்வரின்
சிறப்பு விருதுகள்
மொழியாசிரியர்
முருகையன், பட்டதாரி ஆசிரியர்(தமிழ்), கணுவாப்பேட்டை, வில்லியனுார்.
பெண்
ஆசிரியர்கள் பூங்கொடி, தலைமை ஆசிரியை, அரசு தொடக்கப் பள்ளி, வினாயகம்பட்டு,
புதுச்சேரி.உமாராணி,
விரிவுரையாளர், அன்னை தெரேசா மேல்நிலைப் பள்ளி, காரைக்கால்.
நீலா, பட்டதாரி
ஆசிரியர், திரு.வி.க., அரசு உயர்நிலைப் பள்ளி, புதுச்சேரி.
ஏழிசை நங்கை
(எ)நளினா, பட்டதாரி ஆசிரியர், கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
வில்லியனுார்.
தொழில்நுட்ப
ஆசிரியர்
வைத்தியநாதன்,
உடற்கல்வி ஆசிரியர், திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.
கல்வி
அமைச்சரின் வட்டார விருதுகள்
புதுச்சேரி
கார்த்திகேயன், விரிவுரையாளர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
கதிர்காமம்.சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியர், அரசு தொடக்கப் பள்ளி, அரங்கனுார்.
ரகுபதி,
பட்டதாரி ஆசிரியர், சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளி, தட்டாஞ்சாவடி.
அரவிந்தராஜா,
தொடக்கப் பள்ளி ஆசிரியர், அர்ச்சுன சுப்பராய நாயகர் அரசு நடுநிலைப் பள்ளி,
முதலியார்பேட்டை.
பக்கிரிசாமி,
விரிவுரையாளர், திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,புதுச்சேரி.
ராமமூர்த்தி,
பட்டதாரி ஆசிரியர், சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முத்தியால்பேட்டை,
காரைக்கால்
அமுதவள்ளி, தலைமை ஆசிரியை, அரசு தொடக்கப் பள்ளி, தலத்தெரு பேட், காரைக்கால்.
இளங்கோவன்,
பட்டதாரி ஆசிரியர், காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளி, பூவம், காரைக்கால்.
மாகிவல்சலகுமாரி,
விரிவுரையாளர், புருஷோத்தமன் அரசு மேல்நிலைப் பள்ளி, மாகி.
ஏனாம் தயலதா,
தலைமை ஆசிரியை, ஜாகீர் உசேன் அரசு ஆங்கில தொடக்கப் பள்ளி, ஏனாம்.
வில்லியனுாருக்கு
மாறிய ஆசிரியர் தின விழா
முதல்வர்
நாராயணசாமி கூறுகையில், &'&'ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதியன்று மாலை,
வில்லியனுாரில் நடக்கிறது. இந்த விழாவில், மாநில நல்லாசிரியர் விருதுகள்
வழங்கப்படும். விருதுடன், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும். மேலும்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும், 164
ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்&'&' என்றார். கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்,
கல்வித் துறை செயலாளர் அன்பரசு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் குமார்
உடனிருந்தனர்.
