UPDATED : செப் 04, 2018 12:00 AM
ADDED : செப் 04, 2018 10:36 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தேங்காய்த்திட்டு
ராமகிருஷ்ணன் அரசு உயர்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி மூத்த
ஆசிரியர் லுார்துமேரி தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் முன்னிலை
வகித்தார்.
பள்ளி
தலைமையாசிரியர் பாஸ்கர ராசு கண்காட்சியை திறந்து வைத்தார். கண்காட்சியில் புவி
வெப்பம் அடைதல், நீர் மேலாண்மை, மின்சக்தி சேமிப்பு, சூரிய சக்தி பயன்பாடு, இயற்கை
உணவு என நுாற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றன.
சிறந்த
படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை
ஆசிரியர்கள் குணசேகரன், மீனாட்சி, மலர்விழி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.
ஆசிரியை ரேணுகாம்பாள் நன்றி கூறினார்.
