தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரு மாணவர் ஒரு மரம்: வேளாண் பல்கலையின் புதிய முயற்சி!

ஒரு மாணவர் ஒரு மரம்: வேளாண் பல்கலையின் புதிய முயற்சி!

ஒரு மாணவர் ஒரு மரம்: வேளாண் பல்கலையின் புதிய முயற்சி!


UPDATED : செப் 04, 2018 12:00 AM

ADDED : செப் 04, 2018 03:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2018 12:00 AM ADDED : செப் 04, 2018 03:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பாக ஒரு மாணாக்கருக்கு ஒரு மரம் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அவரவர் பொறுப்பில் அந்த மரங்கள் விடப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் ஆகியோரால் முதலாம் ஆண்டு மாணவர்களைக் கொண்டு இந்த மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடப்பட்ட மரங்கள் அனைத்தும் அவற்றின் இருப்பிடம் மற்றும் வளரியல்பு பண்புகள் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் நுண்பருவ சூழ்நிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பசுமையடைவதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களின் மனதில் மரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படும் என நம்பப்படுகிறது.

மொத்தமாக 1000 மரக்கன்றுகள் இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு இடங்களான ஆராய்ச்சி நிலைய கட்டிடம், அண்ணா அரங்கத்தைச் சுற்றியுள்ள இடங்கள், பல்வேறு துறைகள், விருந்தினர் மாளிகை நூற்றாண்டு விழா கட்டிடம் மற்றும் தாவரவியல் பூங்காவைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக உயரதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் கலந்துகொண்டனர். மகிழ மரம், பூவரச மரம், வேப்ப மரம், கடம்ப மரம், மஹோகனி, ஆய மரம், பாதாம் பரம், புங்கன் மரம் ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us