தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைன் ஜே.இ.இ., தேர்வுக்கு இலவச பயிற்சி

ஆன்லைன் ஜே.இ.இ., தேர்வுக்கு இலவச பயிற்சி

ஆன்லைன் ஜே.இ.இ., தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : செப் 07, 2018 12:00 AM

ADDED : செப் 07, 2018 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2018 12:00 AM ADDED : செப் 07, 2018 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்நிலையில், நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தேசிய தேர்வு முகமை என்ற, என்.டி.ஏ., அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இருந்து, என்.டி.ஏ., வழியாக, மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

என்.டி.ஏ., சார்பில், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை, ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஜனவரி, 6 முதல், 20 வரை, முதல்கட்ட ஜே.இ.இ., பிரதான தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, செப்., 1ல் துவங்கி உள்ளது; 30 வரை பதிவு செய்ய, அவகாசம் தரப்பட்டுள்ளது.

தேர்வுக்கான விதிமுறை கள் மற்றும் கட்டுப்பாடுகள், தீதீதீ.ணtச்.ச்ஞி.டிண என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் குஜராத்தி ஆகிய மூன்று மொழிகளில், ஏதாவது ஒன்றில் தேர்வை எழுதலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, எழுத்து மற்றும் ஆன்லைன் என, இரண்டு முறைகளில், ஜே.இ.இ., தேர்வு நடத்தப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள், எழுத்துத் தேர்விலேயே பங்கேற்றனர். இந்த ஆண்டு, ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்பதால், தேர்வை எதிர்கொள்வது எப்படி என, பிளஸ் 2 மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு தீர்வு தரும் வகையில், ஆன்லைன் தேர்வில் பங்கேற்பது குறித்து, என்.டி.ஏ., சார்பில், இலவச மாதிரி தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு மையம் மற்றும் பயிற்சி தேதிகள், விரைவில் வெளியிடப்படும் என்று என்.டி.ஏ., தெரிவித்துள்ளது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us