உள்கட்டமைப்பு, கட்டுமானம், பொறியியல் துறைகளில் எழுச்சி
உள்கட்டமைப்பு, கட்டுமானம், பொறியியல் துறைகளில் எழுச்சி
UPDATED : அக் 05, 2009 12:00 AM
ADDED : அக் 05, 2009 12:21 PM
அ நிறம் | அளவு
கடந்த சில மாதங்களாக உள்கட்டமைப்பு, கட்டுமானம், பொறியியல் துறைகளில் வேலை வாய்ப்புகள் முன்னேற்றமடைந்து வருகின்றன.
இந்த நிறுவனங்களில் முதுநிலை மற்றும் இதர இடங்களுக்கு ஆள் எடுப்பதில் முன்னேற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக வதோதராவிலுள்ள அறிவு நகரத்திலுள்ள எல் அண்ட் டி பவர் நிறுவனத்திற்கு 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்குப் பணி வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன் 15 சதவீத உயர்வு தான் கிடைத்திடும் என்ற நிலையிலிருந்து இத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு தற்போது 30 சதவீத ஊதிய உயர்வு கிடைத்திடும் நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் பொறியியல் துறைகளில் தற்போது மீட்சிக்கான நம்பிக்கை ஒளி தோன்றியுள்ளது.
