தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனிமேஷன் துறையில் சாதிக்க...

அனிமேஷன் துறையில் சாதிக்க...

அனிமேஷன் துறையில் சாதிக்க...


UPDATED : அக் 10, 2009 12:00 AM

ADDED : அக் 10, 2009 06:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2009 12:00 AM ADDED : அக் 10, 2009 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதில் சோனி இமேஜ்வொர்க்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சோபன் பாபு பங்கேற்று அனிமேஷன் துறை குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். கிளிக், ஸ்பைடர் மேன்-3, ஐ ஏம் லெஜென்ட், டெர்மினிட்டேர் சால்வேஷன் உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்துள்ளார்.



தினமலர் கல்விமலருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:



கடந்த 6 மாதங்கள் அனிமேஷன் துறை முன்னேற்றத்திற்கு சர்வதேச பொருளாதார நெருக்கடி ஒரு தடைக்கல்லாக இருந்தது. தற்போது அந்த நிலை மாறி மீண்டும் முன்னேற்ற பாதையில் செல்கிறது. இந்தியாவில் அனிமேஷன் ஸ்டூடியோக்கள் பெருகி வருகின்றன. வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் அனிமேஷன் சாப்ட்வேர்கள் இங்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், அந்தளவிற்கு தற்போதைய பயன்பாடு இல்லை. 2015ம் ஆண்டிற்குள் வெளிநாடுளுக்கு நிகராக வளரும் என்று கருதப்படுகிறது.



இந்திய அனிமேஷன் நிறுவனங்கள் தங்களது பணிக்கான விலையை குறைத்து வெளிநாட்டு ஆர்டர்களை பெற முயல்வது பலனிக்காது. சிறந்த படைப்புகளை வெளிக்கொணர முடியும் என்றால் அதற்கான விலை ஒரு பொருட்டே இல்லை. இதை எனது அனுபவத்தில் கூறுகிறேன்.



இன்றைய மாணவர்களிடம் அனிமேஷன் மோகம் பெருகிவருகிறது. இத்துறை சார்ந்த போதிய அறிவை வளர்த்துக் கொள்ளாமலேயே நண்பர்கள் சொல்கிறார்கள், உறவினர் சொல்கிறார்கள் என்பதற்காக அனிமேஷன் படிக்கப் போகிறேன் என்கிறார்கள். அனிமேஷன் துறையில் சாதிக்க தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்வது அவசியம்.



அனிமேஷன் படிக்க விரும்புபவர்களுக்கு பொதுவாக ஓவியம் வரையும் திறன் இருக்க வேண்டும். இத்திறன் இருப்பவர்களால் சிறப்பான படைப்பை வெளிக்கொணர முடியும். எனவே, அனிமேஷன் படிக்க விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு நான் முக்கியமாக கூற விரும்புவது...



முதலில் ஓவியத் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். எடுத்த எடுப்பில் அனிமேஷன் சாப்ட்வேர்களை படிக்க முனையாதீர்கள். குறுகிய கால டிப்ளமோ படிப்பில் சேர்வதன் மூலம் இத்துறை பற்றிய அடிப்படை அறிவை பெற முடியும்.



வெளிநாடுகளில் மூன்று மற்றும் நான்கு ஆண்டு பட்டப்படிப்பாக அனிமேஷன் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்சமீபத்தில்தான் அனிமேஷன் படிப்பு முழுநேர பட்டப்படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது. இப்படிப்புகளை படிப்பதன் மூலம் இத்துறை சார்ந்த அடிப்படை முதல், வாய்ப்புகள், நுணுக்கங்கள் ஆகியவற்றை கற்க முடியும்.



பெரும்பாலான மாணவர்களுக்கு அனிமேஷனில் உள்ள பல்வேறு விதமான பணிகள் குறித்து தெரிவதில்லை; அவர்கள் கிராபிக்ஸ் என்றுதான் கூறுகின்றனர். ஒரு சினிமாவில் அனிமேஷன் பயன்படுத்தப்படுகிறது என்றால், அதில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நுணுக்கத்திற்கும் தனிப்பட்ட நிபுணர்களின் பங்களிப்பு உண்டு. இத்துறையில் போதிய அறிவை வளர்த்துக்கொண்டால் மட்டுமே அவர்களின் படைப்பில் உள்ள உழைப்பை உணர முடியும்.



இத்துறையில் சாதிக்க வயது ஒரு தடையல்ல. அறிவு, மனப்பக்குவம், ஆர்வம் ஆகியவை தான் அவசியம். இத்துறை சார்ந்த பணிகளுக்கு ஒருபுறம் அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. அதைவிட, எந்தளவுக்கு இத்துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டுள்ளீர்கள் என்பது தான் முக்கியம். எனவே, அனிமேஷன் துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்கள் முடிந்தவரை இத்துறைசார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு சோபன் பாபு தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us