அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் புதிய வெப்சைட் துவக்கம்
அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் புதிய வெப்சைட் துவக்கம்
UPDATED : அக் 14, 2009 12:00 AM
ADDED : அக் 14, 2009 06:23 PM
சேலம்: சேலம் கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை மாணவர்கள் பயனடையும் வகையில், புதிய வெப்சைட் துவக்கப்பட்டது.
சேலம் கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் இன்ஜினியரிங் துறை சார்பில் வெள்ளி விழாவை முன்னிட்டு தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. எலக்ட்ரானிக்ஸ் அன்டு கம்யூனிகேசன் இன்ஜினியர்ஸ் மாணவர் சங்க செயலாளர் கோபி வரவேற்றார்.
துறைத்தலைவர் வகிதாபானு தலைமை வகித்தார். கோவை ஜெமினி கம்யூனிகேசன்ஸ் நிறுவன கிளை நிர்வாகி அகிலா கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். விழாவின் சிறம்பம்சமாக, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை மாணவர்கள் பயனடையும் வகையில், தீதீதீ.ஞுஞிஞுஞ்ஞிஞுண்ச்டூஞுட்.ஞிணிட் என்ற புதிய வெப்சைட் துவக்கி வைக்கப்பட்டது.
மொத்தம் 40 ஆய்வு கட்டுரைகளையும் 15 திட்ட அறிக்கைகளையும் மாணவர்கள் சமர்பித்தனர். அதில், 23 ஆய்வுக்கட்டுரைகளும், 8 திட்ட அறிக்கைகளும் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரை, திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
