தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.இ.ஓ., பணியிட அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

டி.இ.ஓ., பணியிட அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

டி.இ.ஓ., பணியிட அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை


UPDATED : அக் 22, 2009 12:00 AM

ADDED : அக் 22, 2009 04:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2009 12:00 AM ADDED : அக் 22, 2009 04:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இருந்து வந்த 50 சதவீத இடத்தை குறைத்து வெளியிட்டுள்ள அரசாணை, 12 ஆசிரியர் சங்க கூட்டமைப்பினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணி செல்ல ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.


தமிழகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ) பணியிடங்களில், 50 சதவீத பணியிடங்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மூலமும், 25 சதவீத பணியிடங்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மூலமும், 25 சதவீத பணியிடங்கள் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன.


கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு அரசாணையில், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டை 40 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 25 சதவீதத்தை 35 சதவீதமாக உயர்த்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த உத்தரவை ரத்து செய்து, மாவட்ட கல்வி அலுவலருக்கான 100 சதவீத பணியிடங்களையும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியுயர்வு மூலமாக மட்டுமே நிரப்ப வேண்டும் என உயர்நிலை, மேனிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் சிவக்குமார் கூறியதாவது:
தமிழக அரசின் இந்த உத்தரவு தலைமை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்களில் உள்ள பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்களும் ரத்து செய்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
ஆறு முதல் எட்டாம் வகுப்புகள் வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்கள் நிலைக்கு உயர்த்த வேண்டும். ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் சமச்சீர் கல்வியை மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும்.


தமிழக அரசு அறிவித்துள்ள ஊதியக்குழு அறிக்கையில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். குறிப்பாக, தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. தமிழக அரசு ஆசிரியர்கள் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். இது போன்ற பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேனிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அக்., 24ல் சென்னையில் கோட்டையை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தவுள்ளோம். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து மூன்று பஸ்கள், நான்கு வேன்கள் நிறைய சுமார் இரண்டாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளோம். இவ்வாறு, சிவக்குமார் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us