தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜிப்மர் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை

ஜிப்மர் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை

ஜிப்மர் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை


UPDATED : அக் 22, 2009 12:00 AM

ADDED : அக் 22, 2009 04:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2009 12:00 AM ADDED : அக் 22, 2009 04:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிப்மர் மாணவர்கள் பலர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவக் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் ஜிப்மர் மற்றும் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைகளில், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ஜிப்மர் மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்த இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் ஆறு பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நோய் அறிகுறியுடன் 10 மாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கோமதிக்கு(45) நோய் உறுதி செய்யப்பட்டு தனி வார்டில் சிகிச்சையளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் அடுத்த பழைய கருவாச்சியைச் சேர்ந்த வனிதா(25)விற்கும் நோய் உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


ஜிப்மர் மருத்துவ மாணவர்களுக்கு நோய் தாக்கம் இருப்பதால், பெரும்பாலான மாணவர்களுக்கு நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஜிப்மர் மருத்துவம், நர்சிங், டி.எம்.எல்.டி., உள்ளிட்ட வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு வரும் 24ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தாக்கம் கண்டுள்ள மாணவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us