தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொருளாதார நெருக்கடி: பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பில்லை

பொருளாதார நெருக்கடி: பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பில்லை

பொருளாதார நெருக்கடி: பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பில்லை


UPDATED : அக் 22, 2009 12:00 AM

ADDED : அக் 22, 2009 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2009 12:00 AM ADDED : அக் 22, 2009 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: உலக பொருளாதார நெருக்கடி சூழ்நிலைகள்  பள்ளிச் சிறுவர்களை பாதிக்கவில்லை. கடந்தாண்டை விட இந்தாண்டு, அவர்களுக்கு பெற்றோர் வழங்கும் பாக்கெட் மணி அளவு அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


புதிய தலைமுறை கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கை முறை பற்றிய ஆய்வு ஒன்று நடத்தியது. இதில், ஏழு முதல் 14 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகள் 3,431 பேர், அவர்களின் பெற்றோரில் ஒருவர் மற்றும் நான்கு முதல் ஆறு வயது குழந்தைகள் 1,012 பேர் என மொத்தம் 7,874 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.


இந்த ஆய்வு, பெங்களூரு, ஆமதாபாத், ஐதராபாத், லூதியானா, ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி, நாசிக், இந்தூர், கொச்சி மற்றும் மதுரை ஆகியவை உட்பட 15 நகரங்களில் நடத்தப்பட்டது.


அந்த ஆய்வில் வெளியிடப்பட்ட தகவல்:
பொருளாதார நெருக்கடி சிறிதளவு கூட சிறுவர்களை பாதிக்கவில்லை. கடந்தாண்டை விட, இந்தாண்டு சிறுவர்களுக்கு வழங்கப்படும் பாக்கெட் மணியின் அளவு 34 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏழு முதல் 14 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரில், 41 சதவீதத்தினர், தங்கள் பிள்ளைகள் செலவு செய்ய பணம் கொடுக்கின்றனர். இந்த குழந்தைகளில் 62 சதவீதத்தினருக்கு சேமிக்கும் பழக்கம் உள்ளது.


இந்த பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள், தங்கள் 30 வயதில், அதிக சொத்து மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை விரும்புவதாக தெரிவித்தனர். 13 சதவீதம் குழந்தைகள், தங்கள் 30 வயதில் ஏராளமான நண்பர்கள் வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தனர். இவ்வாறு அந்த ஆய்வு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us